செய்திகள்

ஆண்டிப்பட்டியில் அனுமதி இன்றி மது விற்ற கும்பல் கைது

ஆண்டிப்பட்டியில் அனுமதி இன்றி மது விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கராஜபுரம் அல்லல்ஓடை பகுதியில் குமணன்தொழுவை சேர்ந்த வேலுத்தேவர்(வயது42) என்பவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்த அரைகிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மூலக்கடை எதிரே உள்ள பெட்டிக்கடையில் சிறப்பாறையை சேர்ந்த அன்பழகன்(43), அதேபகுதியில் துரைசிங்கம்(42), குமணன்தொழு கருப்பசாமிகோவில் அருகே உள்ள மீராதெருவை சேர்ந்தவர் ராஜா(40) மற்றும் கடமலைக்குண்டு வசந்தகுமார்(31) ஆகியோர் அனுமதி இன்றி மதுபதுக்கி விற்றதாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT