செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் கைது

ஆண்டிப்பட்டி அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

தேனி:

ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி பகுதியில் தொடர்ச்சியாக சைக்கிள், பைக் மற்றும் ஆட்டோக்களில் வைக்கப்பட்டிருந்த ரேடியோக்கள் திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தன்று மொட்டனூத்து பகுதியில் முருகன்(வயது21) என்பவரது ஆட்டோவில் இருந்த ரேடியோ மற்றும் ஸ்பீக்கர்கள் திருடுபோனது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த ராஜதானி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த கன்னியப்ப பிள்ளைபட்டியை சேர்ந்த சரவணன் மகன் அஜித்(16) மற்றும் கொப்பையன் பட்டியை சேர்ந்த சிவன் பாண்டி ஆகியோரை பிடிக்க முயன்றபோது சிவன்பாண்டி தப்பி ஓடினார். அஜித்தை பிடித்து விசாரித்தபோது திருடியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் இதுபோன்று தொடர்கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அஜித்தை கைது செய்த போலீசார் சிவன்பாண்டியை தேடி வருகின்றனர்.