செய்திகள்

ஆந்திராவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த 3 பேர் கைது

ஆந்திராவில் சிறுமிக்கு 3 வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோ எடுத்த பதிவு வாட்ஸ்-அப்பில் அனுப்பியதால் சிக்கிக்கொண்டனர்.

மாலை மலர்

நகரி:

ஆந்திராவில் ஒரு சிறுமிக்கு 3 வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோ எடுத்த பதிவு வாட்ஸ்-அப்பில் பரவியது. துன்புறுத்தலுக்கு ஆளான அந்த சிறுமியை மற்றொரு சிறுமி காப்பாற்ற முயன்ற காட்சியும் இருந்தது.

இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.

இதில் இச்சம்பவம் பிரகாசம் மாவட்டத்தில் நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரில் கார்த்திக் என்பவருடன் சிறுமி பழக்கம் வைத்துள்ளார். திடீரென அந்த பழக்கத்தை நிறுத்திக் கொள்ள சிறுமி முடிவு செய்ததால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தனது நண்பர்கள் சாமி, பவன் ஆகியோருடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்துள்ளார். அதை நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார்.

வாட்ஸ்அப் வீடியோ மூலம் 3 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர்.

சிறுமியை மீட்க முயன்ற பெண்ணை இவ்வழக்கில் போலீசார் சாட்சியாக சேர்த்துள்ளனர்.