ஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு 
செய்திகள்

ஆந்திரா முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வலியுறுத்தி ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர்கள் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

மாலை மலர்

அமராவதி:

ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும்  எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை ஆந்திர முதலமைச்சரிடம் வழங்கினர்.

மேலும், சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர்.