கோப்புபடம் 
செய்திகள்

பாபநாசம் அருகே சரக்கு ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

பாபநாசம் அருகே சரக்கு ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியான சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை பார்வதிபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைமேரி(வயது87) . இவர் நேற்று மாலை 3.50 மணியளவில் பண்டாரவாடை ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ரெயில், குழந்தைமேரி மீது மோதியது. 

இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி குழந்தைமேரி இறந்தார். இதுகுறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT