போபால்:
மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் என்ற இடத்தில் இந்த ருசிகர சம்பவம் தினமும் நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில் உள்ள யானையானது மதிய உணவை முடித்த பின்னர், அங்குள்ள கடையில் பீடா வாங்க தனது பாகனுடன் செல்கிறது.
அந்த கடையில் யானைக்காக பிரம்மாண்ட பீடா தயார் செய்யப்படுகிறது. பெரிய வெற்றிலைகளை ஒன்றிணைத்து அதில் பீடாவுக்கு தேவையான பொருட்களை பரப்பி சிறப்பு பீடா தயாராகிறது. யானை கடைக்கு வந்ததும், பீடாவை கடைக்காரர் யானையின் வாயில் ஊட்டுகிறார்.
இந்த வீடியோ வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.