நிலநடுக்கம் 
செய்திகள்

மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.

மாலை மலர்

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவின் ஓக்சாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள், பயந்துபோய் வீடுகளை விட்டு வெளியேறி நீண்ட நேரம் திறந்தவெளியில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் இல்லை.