செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.1 ஆகப் பதிவு

இமாச்சலப்பிரதேசத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது. #Earthquake

மாலை மலர்

சிம்லா:

வட மாநிலமான இமாசலப்பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.18 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக  வெளியாகவில்லை.

உலகிலேயே இமாசலப் பிரதேசமும், உத்தரகாண்ட் மாநிலமும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய அபாய பகுதியில் இருப்பதாக நிபுணர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.