அம்மா திட்ட முகாம் 
செய்திகள்

தூத்துக்குடியில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கும் இடங்கள்

தூத்துக்குடியில் இந்த வாரத்துக்கான அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு, அம்மா திட்ட சிறப்பு முகாமை வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடத்தி வருகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை (26-ந்தேதி) நடக்கிறது.

அதன்படி தூத்துக்குடி தாலுகா கீழதட்டப்பாறை, அல்லிகுளம் கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வல்லநாடு கஸ்பா கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகா மேலத்திருச்செந்தூரிலும், சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சியிலும், கோவில்பட்டி தாலுகா கிளவிபட்டியிலும், விளாத்திகுளம் தாலுகா சக்கம்மாள்புரத்திலும், எட்டயபுரம் தாலுகா ராஜாபட்டியிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா பாறைக்குட்டத்திலும், கயத்தாறு தாலுகா கட்டாரங்குளத்திலும், ஏரல் தாலுகா அகரம், மஞ்சள் நீர் காயல் கிராமத்திலும் முகாம் நடக்கிறது.

இந்த முகாம்களில் மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாற்றுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளன. எனவே மக்கள் இந்த முகாம்களில் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.