செய்திகள்

ஹசிம் அம்லாவின் அபார சதத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 189 ரன்கள் குவிப்பு: சேஸிங் செய்யுமா குஜராத் லயன்ஸ்?

மொகாலியில் நடைபெற்று வரும் போட்டியில் ஹசிம் அம்லாவின் அபார சதத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 189 ரன்கள் குவித்துள்ளது. சேஸிங் செய்யுமா குஜராத் லயன்ஸ்?.

மாலை மலர்

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கப்தில், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கப்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

மார்ஷ் 43 பந்தில் 58 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அம்லா 104 ரன்கள் (60 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸ்) குவித்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். இந்த தொடரில் அம்லாவின் 2-வது சதம் இதுவாகும். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்தது.