லக்னோ:
2019ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்குள் பா.ஜ.க.வை பலப்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை பா.ஜ.க ஏற்கனவே தொடங்கி விட்டது. கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா, நாடு முழுவதும் 92 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சியை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த வகையில், 29-ம் தேதி முதல் உத்தர பிரதேசத்தில் மூன்று நாட்கள் முகாமிடுகிறார்.
இந்த பயணத்தின் முதல் நாள் முதல்வர் ஆதித்யநாத் மற்றும் மற்ற துறை மந்திரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார். அதன்பின்னர் மாநிலத்தின் முக்கிய பா.ஜ.க. தலைவர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துவார். அதன்பின் நடைபெற உள்ள கூட்டத்தில் பா.ஜ.க. தொண்டர்களையும் சந்தித்து பேச உள்ளார் என உத்திரபிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் விஜய் பகதூர் பதக் தெரிவித்துள்ளார்.