செய்திகள்

குஜராத்: மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அமித்ஷா, ஸ்மிருதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புட் மனுதாக்கல்

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பா.ஜ.க. சார்பாக போட்டியிடும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் பல்வந்த்சிங் ராஜ்புட் ஆகியோர் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

மாலை மலர்

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 11 மாநிலங்களவை உறுப்பினர்களில் நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்தமாதம் 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் மூன்று பா.ஜ.க. எம்.பி.க்களும், ஒரு காங்கிரஸ் எம்.பி.யும் அடங்குவர். 

இதையடுத்து, காலியாகும் மக்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க. சாரபில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மாநிலங்களவை உறுப்பினரும் தேசிய ஜவுளித்துறை மந்திரியுமான ஸ்மிருதி இரானி மற்றும் பல்வந்த்சிங் ராஜ்புட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, இன்று(வியாழன்) மூன்று பா.ஜ.க. வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மனுதாக்கலின் போது குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி உடனிருந்தார்.