செய்திகள்

மோடி மீண்டும் பிரதமராக சித்தகங்கா மடத்தில் அமித் ஷா சிறப்பு பிரார்த்தனை

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் பாஜக தலைவர் அமித் ஷா பிரதமர் மோடியின் வெற்றிக்காக துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். #AmitShah #VictoryofModi #Siddagangamutt

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கர்நாடக மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தவனேகரே பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூடாநட்பாக கூட்டணி அமைத்து மாநிலத்தின் ஆட்சியை அபகரித்துக் கொண்டனர்’ என தெரிவித்தார்.