செய்திகள்

உலக பாரா தடகளம்: இந்தியாவுக்கு 2-வது பதக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான உருளை தடி (கிளப் த்ரோ) எறிதலில் இந்திய வீரர் அமித்குமார் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மாலை மலர்

லண்டன்:

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான உருளை தடி (கிளப் த்ரோ) எறிதலில் இந்திய வீரர் அரியானாவைச் சேர்ந்த அமித்குமார் சரோஹா 30.25 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். செர்பியாவின் டிமிட்ரிஜெவிச் 31.99 மீட்டர் தூரம் உருளை தடியை எறிந்து மீண்டும் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இந்தியாவுக்கு இது 2-வது பதக்கமாகும். ஏற்கனவே ஈட்டி எறிதலில் சுந்தர் சிங் தங்கம் வென்று இருந்தார்.