செய்திகள்

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால் வெற்றி - நடப்பு சாம்பியன் கெர்பர் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல்சுற்று ஆட்டத்தில் நடால் வெற்றி பெற்றார். நடப்பு சாம்பியன் கெர்பர், ஜப்பானின் நவொமி ஒசாகாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

மாலை மலர்


நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் 28-ம் தேதி தொடங்கியது.

இத்தொடரின், பெண்கள் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியனான ஆறாம் நிலை வீராங்கனை கெர்பர், தரவரிசையில் 59-வது இடத்தில் இருக்கும் நவொமி ஒசாகாவை எதிர்கொண்டார். இப்போட்டியில், ஒசாகா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனை வீழ்த்தினார். இதன்மூலம் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த கெர்பர் அமெரிக்கன் ஓபன் தொடரைவிட்டு வெளியேறினார்.

கெர்பர்

ஆண்கள் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரபேல் நடால், செர்பியாவின் டூஸன் லஜோவிகை எதிர்கொண்டார். இப்போட்டியில், 7-6, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செர்பியா வீரரை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதிப்பெற்றார்.