செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அசரென்கா விலகல்?

2 முறை கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்ற விக்டோரியா அசரென்கா வருகிற 28-ந்தேதி தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பின் ஜூன் மாதம் டென்னிஸ் களத்துக்கு திரும்பினார். இந்த நிலையில் அவரது கணவரிடம் இருந்து பிரிய சட்டப்படி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். இதனால் குழந்தையை போட்டி நடைபெறும் நியூயார்க் நகருக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அவர் அமெரிக்க ஓபனில் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.