செய்திகள்

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம்

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. #SocialNetworks

பசுவதை தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதை கருத்தில் கொண்டு, சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்த வரைவு திருத்தங்களை இணையதளத்தில் வெளியிட்டு, ஜனவரி 15-ந்தேதிக்குள் பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது. அதன் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்க உள்ளது.