லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் உட்பட பல வடமாநிலங்களில் எஸ்.சி./ எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் தளர்வு ஏற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தலித் அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மற்றும் ரெயில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பிஞ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுவர் சிங்(32) என்பவரின் தந்தை லோகா சிங்(68) உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூச்சு விடுவதல் பிரச்சனை எழுந்துள்ளது இதனால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது மகன் முடிவு செய்தார். ஆம்புலன்சில் ஏற்றி செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட வில்லை. ரகுவர் சிங் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் வழிவிடவில்லை. இதனால் தனது தந்தையை தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.
லோக் சிங்கை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நேரத்திற்கு வர தவறியதால் ஒருவரின் உயிர் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்கள் அவசரமாக செல்லும் ஆம்புலன்சிற்கு வழி விட்டிருந்தால் ஒரு உயிர் காப்பற்றப்பட்டிருக்கும். ஆனால் தனது தந்தை உயிர் போராட்டக்காரர்களால் பறிக்கப்பட்டதாக ரகுவர் சிங் கண்ணீர் மல்க தெரிவித்தார். #tamilnews