காங்கிரஸ் 
செய்திகள்

அம்பேத்கார் சிலை உடைப்பு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்:

வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சு.வீரபாண்டியன் தலைமை வகித்தார். 

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், எஸ்.செல்வபெருந்தகை, பொன்.கிருஷ்ணமூர்த்தி, தகவல் தொடர்பு பிரிவு மாணிக்கவாசகம், பெரம்பூர் நிசார், அகரம் கோபி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT