செய்திகள்

அமர்நாத் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்வு

8-வது நாளான நேற்று அமர்நாத் குகைக்கோயிலுக்கு பயணம் மேற்கொண்டவர்களில், பல்வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

40 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை, கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 7-ம் தேதியுடன் இந்த யாத்திரை நிறைவடையும். இதுவரை 8 குழுக்கள் பனி லிங்கத்தை தரிசிக்க புறப்பட்டுச் சென்றுள்ளன. தற்போது வரை சுமார் 1,05,380-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். மேலும் 20,000 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசிக்க உள்ளனர்.

இதில் காஷ்மீரின் வடக்கு பகுதயில் உள்ள குல்காம் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்தில் சமையல் செய்து வந்த யாத்ரீகர் ஒருவர் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார். இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கங்கா என்பவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் படுகாயமடைந்த 9 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தபங்கி லால்(59) என்பவர் உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுசில் குமார் பைக் என்பவர் பனிக் குகையில் மயங்கி விழுந்துள்ளார்.

SCROLL FOR NEXT