கோப்பு படம் 
செய்திகள்

அமர்நாத் யாத்திரை - ராஜஸ்தான் பக்தர் உயிரிழப்பு

அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பக்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

ஸ்ரீநகர் :

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 46 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் பகுதியை சேர்ந்த சுந்தரிதேவி சவுகான் (63) எனும் பக்தருக்கு அமர்நாத் யாத்திரையின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்றபோது அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.