சுற்றுலா பயணிகள் முதல்வர் நாராயணசாமியுடன் செல்பி எடுத்துக்கொண்ட காட்சி. 
செய்திகள்

நான் சினிமா நடிகரா? செல்பி எடுத்தவர்களிடம் நாராயணசாமி கேள்வி

புதுவைக்கு சுற்றுலா வந்த திருவண்ணாமலை சுற்றுலா பயணிகள் நாராயணசாமியுடன் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது அவர் நான் என்ன சினிமா நடிகரா? என்று கேட்டதால் சிரிப்பலை எழுந்தது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவைக்கு சுற்றுலா வந்த திருவண்ணாமலை சுற்றுலா பயணிகள் சட்டசபை எதிரில் நின்றிருந்தனர். அப்போது சட்டசபைக்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி காரில் இருந்து இறங்கி வந்து அவர்களிடம் பேசினார்.

புதுவை பிடித்திருக்கிறதா? என கேட்டார். அதற்கு அவர்களும் புதுவை அழகாகவும், சுத்தமாகவும் உள்ளது என்றனர்.

மேலும் அவர்கள் முதல்-அமைச்சருடன் செல்பி எடுத்து கொள்ள விரும்பினார்கள்.

இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி நான் என்ன நடிகரா? என கேட்க, அவர்கள் முதல்வருடன் செல்பி எடுப்பது பெருமை என கூறி செல்பி எடுத்து கொண்டனர்.

இதனையடுத்து திருச்சியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

திருச்சி கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்களாகிய நாங்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் சந்திப்பதாக முதல்வரிடம் தெரிவித்தனர். அவர்களை முதல்- அமைச்சர் நாராயணசாமி வாழ்த்தினார்.