வீடு புகுந்து கொள்ளை 
செய்திகள்

ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம்-நகை கொள்ளை

ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம்-நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஆழ்வார்குறிச்சி:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பாங்குளம் சிவஞானபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 43). இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு தம்பதியர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர். அவர்களது மகள் பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணம், 3 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது தான் கொள்ளை நடந்தது அவர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசில் பாலமுருகன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.