ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் உள்ள லாலாவாண்டி காட்டுப் பகுதியில் பசுக்களை கடத்தியதாக கூறி ரக்பர்கான் என்ற வாலிபர் சமீபத்தில் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ரக்பர்கான் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், இருக்கும்போது அங்கு வந்த ராம்நகர் போலீசார் அடிபட்டவரை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தாமல், பசுக்களை பாதுகாப்பதிலும், அவற்றை கோஷாலாவுக்கு கொண்டு செல்வதிலுமே கவனம் செலுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், உன்னாவோ கற்பழிப்பு வழக்கை மேற்கோள் காட்டிய எம்.பி கரன் சிங் குற்றவாளிக்கு ஆதரவாகவே பா.ஜ.க தலைவர்கள் இருந்தார்கள் என தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பாராளுமன்றத்தில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.