செய்திகள்

பெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் நிற ஆட்டோக்கள்: அசாமில் அறிமுகம்

அசாமில் பெண்கள், குழந்தைகள் மட்டும் பயணம் செய்யும் வகையில் பெண் டிரைவர்கள் கொண்ட பிங்க் நிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மாலை மலர்

அசாம் மாநிலம் போன்கைகான் நகரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் பயணம் செய்யும் வகையில் புதிய ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள இந்த ஆட்டோக்களை பெண் டிரைவர்களே ஓட்டுகின்றனர்.

13 ஆட்டோக்கள் முதற்கட்டமாக செயல்பட்டு வருகின்றன. இந்த ஆட்டோக்களை ஓட்டும் பெண்களுக்கு டிரைவிங் பயிற்சி கொடுக்கப்பட்டு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சுடிதார் சீருடையாக வழங்கப்பட்டு உள்ளது. காலையிலிருந்து மாலை 6 மணி வரை இவர்கள் இந்த சீருடையுடன் ஆட்டோ ஓட்ட வேண்டும்.


பிங்க் ஆட்டோ சர்வீஸானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் உரியது. இது பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் டெல்லி, மும்பை, சூரத், ராஞ்சி மற்றும் புவனேஷ்வர் போன்ற நகரங்களில் செயல்பட்டு வருகிறது.