தேஜ் பகதூட் - அலகாபாத் உயர்நீதி மன்றம் - பிரதமர் மோடி 
செய்திகள்

வாரணாசியில் பிரதமர் மோடியின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

எல்லையில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் கடந்த பாராளுமன்ற  தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தேஜ் பகதூர் யாதவ் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

எல்லைப் பாதுகாப்பு படையில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான சான்றிதழை இணைக்கவில்லை என்று கூறி தேஜ்பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தவறு என்றும், வாரணாசி தொகுதி தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தேஜ் பகதூர் வழக்கு தொடர்ந்தார்.

SCROLL FOR NEXT