குமாரசாமி 
செய்திகள்

கர்நாடகாவில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா

காங்கிரஸ் மந்திரிகளை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் ஆளும்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அனைத்து மந்திரிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த 21 காங்கிரஸ் மந்திரிகள் தாமாக முன்வந்து தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்ததாக சித்தராமையா தெரிவித்தார்.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த  ரேவண்ணா இல்லத்தில் அக்கட்சியை சேர்ந்த மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் நடந்தது.