சென்னை:
91-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஆக்கி தமிழ்நாடு அணி 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி அணியை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது. தமிழக அணியில் வீர தமிழன் 2 கோலும், சரவணகுமார் ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே அணி 4-2 என்ற கோல் கணக்கில் பாரத் பெட்ரோலியம் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்னொரு ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ராணுவ லெவன் அணியை சாய்த்து 4-வது வெற்றியை ருசித்து ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.
இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஓ.என்.ஜி.சி.-மத்திய தலைமை செயலகம் (பிற்பகல் 2.30 மணி), ஆக்கி தமிழ்நாடு-ஆக்கி பெங்களூரு (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன.