முதல் சுற்றிலேயே சாய்னா நேவாலுக்கு கடும் சவாலாக இருக்கிறது. உலகத்தர வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் சாய்னா, நம்பர் ஒன் வீராங்கனையான தைவானின் தாய் சு யிங்கை எதிர்கொள்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் தொடரில் சாய்னா இவரிடம் தோல்வியடைந்தார். இதற்கு பழிக்குப்பழி வாங்க சாய்னாவிற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
பிவி சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதேவேளையில் 2-வது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஷாங்-கை எதிர்கொள்வார். இந்திய ஓபனில் பிவி சிந்துவை தோற்கடித்தவர் பெய்வென் ஷாங் என்பது குறிப்பிடத்தக்கது.