காங்கிரஸ் 
செய்திகள்

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் மாநில முதல் மந்திரிகளுக்கு அழைப்பு

டெல்லியில் நாளை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல் மந்திரிகள் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவியேற்று கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ஒரு வருடம் நிறைவடைந்தது. 

மக்களவை தேர்தலில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ராஜினாமா செய்த ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைவராக வரவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரசின் சில தலைவர்கள்  தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் என அக்கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல் மந்திரிகள் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.