செய்திகள்

ஆதார் அட்டை கட்டாயம் தொடர்பான அனைத்து வழக்குகளும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

வங்கி கணக்குகள், கைபேசி இணைப்புகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்னும் திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

மாலை மலர்

அரசு திட்டங்களின் மூலம் ஆதாயம் அடைய ஆதார் எண் கட்டாயம் என்னும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், வங்கி கணக்குகள், கைபேசி இணைப்புகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்னும் திட்டத்தை எதிர்த்தும் பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகளின்மீது நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தீர்மானித்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இவ்வழக்குகளின் விசாரணையின்போது, மேற்படி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட் இவ்வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியுள்ளது.