கோப்புபடம் 
செய்திகள்

கோட்டூர் அருகே மதுவிற்றவர் கைது

கோட்டூர் அருகே மது விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டூர்:

கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரூபாவதி, ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கோட்டூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் கோமாளப்பேட்டையை சேர்ந்த சுதாகர் (வயது32) என்பதும், மதுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.