செய்திகள்

நொய்யலில் திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது

கரூர் மாவட்டம் நொய்யலில் திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நொய்யல் நடுத்தெருவை சேர்ந்தவர் மகுடேஸ்வரன் (வயது 42), இவர் நொய்யல் அருகே அண்ணாநகரில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மகுடேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.