செய்திகள்

நல்லம்பள்ளி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

நல்லம்பள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை கைது செய்தனர்.

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வழக்கம்போல் அதியமான் கோட்டை போலீசார் கோவிலூர் அருகே ரோந்து பணியில் இருந்த போது அந்த வழியாக வந்த டிஎன் 29. எடி 7029பதிவு எண் கொண்ட டாடா ஏசியை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து ஆய்வு செய்தபோது, அரசு மதுபாட்டில்கள் 600 க்கும் மேல் கடத்தி செல்வது தெரியவந்து.

அதை தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், நார்த்தம்பட்டியை சேர்ந்த மல்லிகாஅர்சுனன் மகன், மல்லன்(45), ராசுந்தரம் மகன், முருகேசன் (35), தான்டன் மகன், கோவிந்தன் (36) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT