செய்திகள்

ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்தார் அலஸ்டைர் குக்

தொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்று இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvPAK

இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் அலஸ்டைர் குக், தொடர்ச்சியாக 153 டெஸ்ட் விளையாடிய வீரர் என்ற ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 2006-ல் அலஸ்டைர் குக் அறிமுகமானார். இந்த டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்த டெஸ்டில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விளையாடவில்லை.

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அவரின் 155-வது டெஸ்ட். அதற்குப்பிறகு தொடர்ச்சியாக 153 டெஸ்டில் விளையாடியுள்ளார். 155 டெஸ்டில் 12078 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 294 ரன்னாகும்.