அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணையைச் சேர்ந்தவர் கார்த்திகாயினி (வயது 27). தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாக வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் ஆனந்த் (30) சென்னையில் போலீஸ்காரராக உள்ளார்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திகாயினி பணிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். குமாரம் அருகே அவர் சென்றபோது எதிரே வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திகாயினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி, தண்ணீர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.