ஐதராபாத்:
காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். முதல்கட்டமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து இதுதொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார். மேலும், பல்வேறு தலைவர்களை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, இதே விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்த சந்திரசேகர் ராவ் சென்னை வந்தார். கோபாலபுரம் சென்ற அவர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
அதன்பின் ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர் ராவை, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று சந்தித்து பேசினார்.
உ.பி.யின் முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று ஐதராபாத் வந்தார். அப்போது அவர் ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரியும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர் ராவை சந்தித்தார். இருவரும் மதிய உணவை ஒன்றாக அருந்தினர். அதன்பின் இருவரும் மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். #ChandrashekarRao #AkikelshYadav #ThirdFront