ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமணம் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக உலகின் பல தலைவர்களுக்கும் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதியர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ்களின் புகைப்படம் மற்றும் வீடியோ கண்களை கவரும் வகையில் இருந்தன. இவை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில், முகேஷ் அம்பானியின் அண்டிலா இல்லத்தில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின.
பாடகி பல்குனி பதாக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆடல் பாடல் என அனைத்து விதமான கொண்டாட்டங்களுடன் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் களைகட்டி உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் முகேஷ் அம்பானி-நீதா அம்பானி, அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி, முகேஷ் அம்பானியின் தாயார் கேகிலபென் அம்பானி, உட்பட உறவினர்கள், நண்பர்கள் என குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.