திருப்பரங்குன்றம்:
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஜெயலலிதா இறந்த பின்னர் கட்சியில் யாருக்கும் பயம் இல்லாமல் போய்விட்டது. அதேபோல் கட்டுப்பாடும் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் யாரும் வாய்திறக்கவில்லை.
தற்போது அமைச்சர்கள் இஷ்டத்துக்கு எதை எதையோ பேசுகின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால் இவர்களது பதவியை பறித்திருப்பார்.
மேலும் கட்சியில் தொண்டர்களும், நிர்வாகிகளுக்கும் மரியாதை இல்லை.
மேற்கண்டவாறு பேசினார்.#tamilnews