சென்னை:
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் இன்று தலைமை கழகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். காலை 10.15 மணிக்கு அவர் வந்தார்.
டி.டி.வி. தினகரன் நேற்று காலை தேனி சென்ற போது அவரை ஏ.கே.போஸ் சந்தித்து பேசினார். தினகரனுடன் அமர்ந்து பேட்டியும் அளித்தார். இதன் மூலம் அவர் தினகரன் அணியில் சேர்ந்ததாக கூறப்பட்டது.
அதன் பிறகு மதுரை திரும்பியதும் ஏ.கே.போஸ் முடிவில் மாற்றம் ஏற்பட்டது. நான் எப்போதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பேன் என்று அறிவித்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று தலைமை கழகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வும் மனம் மாறி எந்த அணி பக்கமும் செல்லாமல் ஊசலாட்டத்தில் இருந்தார். இன்று அவர் தலைமைக்கழகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.