புதுடெல்லி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்து வந்த ஏ.கே.அந்தோனி திடீரென மயங்கி விழுந்ததால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர் ஏ.கே.அந்தோனி (76).
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே.அந்தோணி தனது வீட்டில் இன்று காலை திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை உடனடியாக டெல்லி ராம் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி உள்ளது. அதனால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.