செய்திகள்

ராணுவ வீரர் சேவை செய்ய காத்திருப்பதுபோல் ரகானே காத்திருக்கிறார்: பயிற்சியாளர்

ராணுவ வீரர் சேவை செய்ய காத்திருப்பதுபோல் ரகானே தனது வாய்ப்பிற்காக காத்திருக்கிறார் என்று அவரது பயிற்சியாளர் பிரவீண் அம்ரே தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட ரகானே தொடர் நாயகன் விருது பெற்று அசத்தினார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடர்ந்து நான்கு அரைசதங்கள் விளாசி அசத்தினார்.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் ரகானேவை தொடக்க வீரராக களம் இறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவதால் ரகானே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

SCROLL FOR NEXT