செய்திகள்

விமானநிலையம் ஊழியர்களுக்கு ஆதார், பையோமெட்ரிக்குடன் கூடிய நுழைவுச் சீட்டு

விமானநிலையத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு ஆதார் மற்றும் பையோமெட்ரிக்குடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்போவதாக விமான பாதுகாப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

விமானநிலையங்களில் சமூக விரோதிகளின் ஊடுருவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. அதன்படி விமான நிலையத்தில் பணிபுரியும் கடை ஊழியர்கள், பைலட், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நுழைவுச் சீட்டு கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதில் அவர்களின் ஆதார் விவரங்கள் மற்றும் பையோமேட்ரிக் போன்றவை பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ஏரோட்ரோம் நுழைவு சீட்டு எனப்படும் இந்த அனுமதிச் சீட்டை வழங்கப் போவதாக சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு மற்றும் விமான நிலைய இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் மூலம் விமானநிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தலாம். புதிய முறையை நடைமுறைப்படுத்த சிவில் விமானத்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. தற்சமயம் ஒரு வருடத்திற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. அதனை மூன்று வருடமாக விரைவில் மாற்றப்படும் என அக்குழு தெரிவித்துள்ளது.