கைது 
செய்திகள்

டிக்கெட் சலுகைக்காக ஆள் மாறாட்டம் - விமான நிறுவன ஊழியர், தோழியுடன் கைது

டிக்கெட் சலுகைக்காக ஆள்மாறாட்டம் செய்ததாக இளம்பெண்ணையும், ராகேஷ் வியாசையும் தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

மாலை மலர்

கொச்சி:

கொச்சி விமான நிலையத்தில், விமானத்தில் செல்வதற்காக வந்திருந்த 23 வயது இளம்பெண் ஒருவரின் ஆவணங்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பரிசோதித்தனர். அப்போது அவரது ஆதார் அட்டை சந்தேகத்துக்கிடமாக இருந்ததையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது அவரை இண்டிகோ விமான நிறுவனத்தில் பணியாற்றும் ராகேஷ் வியாஸ் என்பவர் அங்கு விட்டு சென்றதும், விமான டிக்கெட் கட்டணத்தில் சலுகை பெறுவதற்காக வியாசின் தங்கையின் ஆதார் அட்டையை அந்த இளம்பெண் கொண்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த இளம்பெண், வியாசின் தோழி எனவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்ததாக அந்த இளம்பெண்ணையும், ராகேஷ் வியாசையும் தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.