யாத்ரீகர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது.
பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை வந்த நிலையில், அங்கு அமர்நாத் யாத்திரை மற்றும் மச்சாயில் மாதா யாத்திரை பக்தர்களையும் மற்ற சுற்றுலாப் பயணிகளையும் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை கிடுகிடுவென உயர்த்தியுள்ளன. ஸ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லும் விமான டிக்கெட்டின் விலை ரூபாய் 10000 முதல் 22000 வரை வசூலிக்கப்படுகின்றது. வழக்கமான கட்டணத்தை விட இது ரூ.3000 அதிகமாகும்.