புதுடெல்லி:
ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 11 மணியளவில் புதுடெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் சென்றது. ஜம்மு நகரில் மதியம் 12.5 மணியவில் தரையிறங்கிய போது திடீரென விமானத்தின் டயர் வெடித்தது.
இதனால் விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தை தொடர்ந்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.