செய்திகள்

விமானி அறையில் புகை: ஏர் இந்தியா விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம், விமானி அறையில் ஏற்பட்ட புகை வாசனையால் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மாலை மலர்

மும்பை:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானி அறையில் இருந்து நெருப்பு எரியும் புகை வாசனை நுகரப்பட்டதை தொடர்ந்து, விமானம் அவசரனாஜ தரையிறக்கப்பட்டது. இருப்பினும், வெளியில் புகை எதுவும் தெரியவில்லை.

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு  ஏற்பட்டது. 

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தரையிறங்க முயன்ற போது, ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.