செய்திகள்

124 பயணிகளுடன் டெல்லிக்கு சென்ற விமானம் பறவை மோதியதால் அவசர தரையிறக்கம்

124 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சின் பகுதியில் பறவை மோதியதால் பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #AirIndia

மாலை மலர்

பாட்னா:

கொல்கத்தாவிலிருந்து டெல்லி நோக்கி இன்று பிற்பகலில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 124 பயணிகள் இருந்த இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எஞ்சின் பகுதியில் பறவை மோதியது. இதனால், பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் உள்ள பயணிகள் பத்திரமாக உள்ளதாகவும், தொழில்நுட்ப பணியாளர்கள் விமானத்தை சரிசெய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.