செய்திகள்

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - லண்டனில் அவசர தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஏர் இந்தியா விமானம் லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

லண்டன்:

மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகருக்கு ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. திடீரென விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் லண்டன் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இத்தகவலை ஏர் இந்தியா நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT