செய்திகள்

கேதார்நாத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தீப்பிடித்தது - 4 பேர் காயம்

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் தரையிறங்கியபோது இந்திய விமானப்படையின் சரக்கு ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

இந்திய விமானப்படையின் சரக்கு ஹெலிகாப்டர் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் அருகில் உள்ள ஹெலிபேடு தளத்திற்கு இன்று காலை சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன. ஹெலிபேடு தளத்தில் தரையிறங்கியபோது, திடீரென ஓரத்தில் இருந்த இரும்பு தூண் மீது ஹெலிகாப்டர் மோதி, பின்னர் தரையில் விழுந்தது.